மிட்டாய் கவிதைகள்!

உயிர் துளியே!

September 29, 2014

UyirThuliye

சிறுதுளிர் தாங்கும்
பனித்துளி போலே,

பனித்துளிக் குள்ளே
குளிர்நீர் போலே,

அந்நீர் காக்கும்
சிலஉயிர் போலே,

என்னுயிர் முழுதும்
நீயே நின்றாய்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்